மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்ற குரங்கு
பாகல்கோட்: மக்கள் விபத்தில் காயமடைந்தால், உடல் நிலை பாதிக்கப்பட்டால், மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறுவது சகஜம். ஆனால் குரங்கு ஒன்று, காயமடைந்து மருத்துவமனைக்கு வந்து, டாக்டரிடம் சிகிச்சை பெற்று சென்றுள்ளது.கொப்பால் மாவட்டம், இளகல் தாலுகாவின் குடூரா கிராமத்தில் ஆரம்ப சுகாதார மையம் உள்ளது. நேற்று முன் தினம் டாக்டர் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது குரங்கு, அங்கு வந்தது.தன் முதுகு பகுதியில் காயம் இருப்பதை, 'கை' சைகையால் காண்பித்தது. அதை புரிந்து கொண்ட டாக்டர், காயத்துக்கு மருந்து போட்டு, சிகிச்சை அளித்தார். அதன்பின் குரங்கு அங்கிருந்து சென்றது.யாருடைய துணையும் இல்லாமல் மருத்துவமனையை தேடி வந்து, சிகிச்சை பெற்றுக்கொண்டதை பார்த்து டாக்டர்களும், கிராமத்தினரும் ஆச்சரியம் அடைந்தனர்.