உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 11ல் துவக்கம்

மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 11ல் துவக்கம்

பெங்களூரு: கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர், ஆகஸ்ட் 11ம் தேதி துவங்கி 22ம் தேதி வரை நடக்க உள்ளது.கர்நாடக சட்டசபையில் ஆண்டின் முதல் கூட்டத்தொடர், பட்ஜெட், மழைக்காலம், குளிர்காலம் என, நான்கு முறை சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும். முதல் கூட்டத்தொடர், பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்துள்ள நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 11ம் தேதி துவங்கி 22ம் தேதி வரை, பெங்களூரு விதான் சவுதா சட்டசபை அரங்கில் நடக்க உள்ளது.மொத்தம் 12 நாட்கள் கூட்டத்தொடர் நடக்க உள்ளதாக கூறப்பட்டாலும், ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம். ஆகஸ்ட் 16, 17ம் தேதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமை என்பதால், மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால் 9 நாட்கள் மட்டுமே கூட்டத்தொடர் முழுமையாக நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி