உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மின்சாரம் பாய்ந்து தாய், மகன் பலி படுகாயத்துடன் மகள் அட்மிட்

மின்சாரம் பாய்ந்து தாய், மகன் பலி படுகாயத்துடன் மகள் அட்மிட்

தொட்டபல்லாபூர் : பெங்களூரு தொட்டபல்லாபூரில் உலர்ந்த துணியை எடுக்கும் போது மின்சாரம் பாய்ந்ததில், தாய், மகன் உயிரிழந்தனர். மகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெங்களூரு, தொட்டபல்லாபூரின் கர்னல் கிராமத்தை சேர்ந்தவர்கள் லலிதம்மா, 55. அவரது மகன் சஞ்சய், 35, மகள் லட்சுமி தேவி, 32. நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன் இரும்பு கம்பியில் உலர்த்த போட்டிருந்த துணிகளை, லலிதம்மா எடுத்தார். அப்போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதை பார்த்த அவரது மகன், தாயை காப்பாற்ற முயற்சித்த போது, அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இருவரையும் காப்பாற்ற முயற்சித்த மகளையும் மின்சாரம் தாக்கியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், மின் இணைப்பை துண்டித்தனர். லலிதம்மா இறந்துவிட்டதால், அவரது மகன் சஞ்சய், மகள் லட்சுமி தேவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சஞ்சய் இறந்து விட்டார். படுகாயம் அடைந்த லட்சுமி தேவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த பெஸ்காம் அதிகாரி மஞ்சுநாத், தொட்டபல்லாபூர் ரூரல் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சாதிக் பாஷா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !