உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / இரண்டு குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

இரண்டு குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

கொப்பால்: கொப்பால் மாவட்டம், குகனுார் தாலுகாவின் பெனகல் கிராமத்தில் வசித்தவர் லட்சுமவ்வா, 30. இவருக்கும், கொப்பால் நகரின் கக்கிஹள்ளி கிராமத்தின் ஹனுமப்பா, 35, என்பவருக்கும் திருமணமாகி ஒன்பது ஆண்டுகளாகிறது. ஆனால் லட்சுமவ்வா புகுந்த வீட்டுக்கு செல்லாமல், கணவருடன் தாய் வீட்டிலேயே வசித்து வந்தார். தம்பதிக்கு ரமேஷ், 4, என்ற மகனும், ஜான்ஹவி, 2, என்ற மகளும் உள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக, தம்பதி இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் லட்சுமவ்வா மனம் வருந்தினார். நேற்று காலை கணவர், பணிக்கு சென்றிருந்தார். வீட்டில் யாரும் இல்லை. மதியம் மகனையும், மகளையும் துாக்கிட்டு கொலை செய்துவிட்டு, தானும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கொப்பால் எஸ்.பி., ராம் அரசித்தி கூறுகையில், ''வீட்டில் யாரும் இல்லாத போது, தன் இரண்டு குழந்தைகளுடன், லட்சுமவ்வா தற்கொலை செய்து கொண்டார். இதற்கு குடும்ப பிரச்னையாக இருக்கலாம் என, சந்தேகிக்கிறோம். விசாரணைக்கு பின்னரே, உண்மையான காரணம் தெரியும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை