உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மகன் இறந்ததால் வீட்டில் இருந்து மருமகளை விரட்டிய மாமியார்

மகன் இறந்ததால் வீட்டில் இருந்து மருமகளை விரட்டிய மாமியார்

யஷ்வந்த்பூர்: உடல்நலக்குறைவால் மகன் இறந்த நிலையில் மருமகளை, மாமனாரும், மாமியாரும் சேர்ந்து வீட்டில் இருந்து வெளியே விரட்டினர்.வேறு எங்கும் செல்ல வழி இல்லாததால், கணவர் வீட்டின் முன் 20 நாட்களாக பெண் வசிக்கிறார்.பெங்களூரு, யஷ்வந்த்பூர் பாபாசாகேப் பாளையா பகுதியை சேர்ந்தவர் ராகவேந்திரா, 35. இவரது மனைவி பூஜா, 33. இந்த தம்பதிக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை.திருமணத்திற்கு முன்பே ராகவேந்திராவுக்கு உடலில் சில பிரச்னைகள் இருந்துள்ளன.இதுபற்றி பூஜா குடும்பத்தினரிடம் கூறாமல், ராகவேந்திராவின் பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.கடந்த ஏப்ரல் மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்டு ராகவேந்திரா இறந்துவிட்டார். அதன்பின் மாமனார் சீனிவாஸ், மாமியார் சாந்தம்மாவுடன் பூஜா வசித்தார்.கடந்த 20 நாட்களுக்கு முன்பு, பூஜாவிடம், மாமனார், மாமியார் திடீரென தகராறு செய்தனர்.'எங்கள் மகனே இறந்துவிட்டான்; இனி நீ எங்களுடன் இருந்து என்ன செய்ய போகிறாய்; எங்களுக்கு நீ தேவை இல்லை' என்று கூறி, வீட்டில் இருந்து வெளியே செல்லும்படி கூறியுள்ளனர்.''உங்களை நம்பித் தான் இங்கு உள்ளேன். நான் எங்கு செல்வேன்?'' என்று பூஜா கேட்டுள்ளார்.ஆனாலும் மனம் இறக்காத மாமனார், மாமியார், வீட்டில் இருந்து அடித்து பூஜாவை வெளியே விரட்டினர்.வேறு எங்கும் செல்ல வழி இல்லாததால், கணவன் வீட்டின் முன் பூஜா வசிக்க ஆரம்பித்தார். இரவில் வீட்டின் முன்பு துாங்குகிறார். சிறிய அடுப்பு வாங்கி சமையல் செய்து சாப்பிடுகிறார். பக்கத்து வீட்டை சேர்ந்த பெண்ணின் கழிப்பறை பயன்படுத்தி வருகிறார்.இதுபற்றி சிலர் மகளிர் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை