உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கன்னடம் பேச முடியாமல் தடுமாறிய நகராட்சி அமைச்சர் 

கன்னடம் பேச முடியாமல் தடுமாறிய நகராட்சி அமைச்சர் 

பெங்களூரு: கன்னடத்தை சரளமாக பேச முடியாமல், நகராட்சி நிர்வாக அமைச்சர் ரஹிம்கான் தடுமாறிய, வீடியோ வைரலாகி உள்ளது. கர்நாடக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் ரஹிம்கான். இவர், பீதர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., கடந்த 19ம் தேதி சட்டசபை கூட்டத்தொடரின் போது, நகராட்சி நிர்வாகம் தொடர்பான மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்தார். அந்த மசோதாவின் மீது பேசுகையில், கன்னடத்தை சரளமாக பேச முடியாமல் தடுமாறினார். அவர் அருகில் அமர்ந்திருந்த நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பைரதி சுரேஷ் உதவி செய்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. கன்னடம் பேச தெரியாமல் தடுமாறிய, அமைச்சருக்கு எதிராக பலரும் கருத்து பதிவிடுகின்றனர். 'கர்நாடகா அப்டேட்' என்ற 'எக்ஸ்' பக்கத்தில், கன்னடத்தை தெளிவாக பேச தெரியாத ரஹிம்கான் அமைச்சராக இருப்பது துரதிர்ஷ்டவசமானது. முஸ்லிம் ஒதுக்கீட்டின் கீழ் அமைச்சர் பதவியை வழங்குவதில், காங்கிரஸ் எவ்வளவு ஆர்வமாக உள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டு. நம் சொந்த மொழியில் சரளமாக பேசும் தலைவர்களை ஏன், அமைச்சர்களாக தேர்வு செய்யவில்லை என்று, கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை