பெயர் பலகை அழிப்புக்கு நகராட்சி வருத்தம்
தங்கவயல்: தங்கவயலில், கன்னட அமைப்பினருடன் சேர்ந்து நகராட்சி ஆணையர் ஸ்ரீதர் தலைமையில், பெயர் பலகைகள், பேனர்களை நகராட்சி ஊழியர்கள் கிழித்ததற்கு, நகராட்சி அதிகாரிகள் வருத்தம் தெரிவித்தனர். இதுகுறித்து, ராபர்ட்சன் பேட்டை போலீஸ் நிலையத்தில் நேற்று அமைதி கூட்டம் நடந்தது. வியாபாரிகள் சரமாரியாக கேள்விகள் எழுப்பினர். சட்ட விரோதமாக விளம்பர பலகைகளை நாசப்படுத்தியதை கண்டித்தனர். பதில் சொல்ல முடியாமல் திணறிய நகராட்சி அதிகாரி ஜெயராமன், 'செய்தது தவறு தான்' என வருத்தம் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் நகராட்சி ஆணையர் ஸ்ரீதர் பங்கேற்கவில்லை.