உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கணவரை பிரிந்த பெண் கொலை மர்ம நபர்களுக்கு வலை

 கணவரை பிரிந்த பெண் கொலை மர்ம நபர்களுக்கு வலை

ஹாசன்: கணவரை பிரிந்த பெண்ணை கொலை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சிக்கமகளூரின், மல்லேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்பந்தனா, 34; திருமணமானவர். ுடும்ப பிரச்னை காரணமாக, கணவருடன் ஏற்பட்ட தகராறில், அவரை பிரிந்தார். ஒன்பது நாட்களுக்கு முன், ஹாசன் மாவட்டம், பேலுார் நகருக்கு வந்து, கானிகரா சாலையில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இரண்டு நாட்களாக அவர் வெளியே வரவில்லை. ஆனால் கதவு திறந்திருந்தது. இதை கவனித்த அக்கம், பக்கத்தினர் நேற்று காலை கதவை தட்டினர். குரல் கொடுத்து அழைத்தனர். பதில் வரவில்லை. சந்தேகமடைந்த அவர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த பேலுார் போலீசார், வீட்டுக்குள் சென்றனர். உள்ளே, நிர்வாண நிலையில் ஸ்பந்தனா இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். மோப்ப நாய், தடயவியல் ஆய்வக வல்லுநர்களை வரவழைத்து ஆய்வு செய்கின்றனர். வழக்குப் பதிவு செய்து, கொலையாளிகளை தேடி முயற்சிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்