உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / வித்தியாசமான சுவையில் மஷ்ரூம் ஆம்லெட்

வித்தியாசமான சுவையில் மஷ்ரூம் ஆம்லெட்

– நமது நிருபர் – காலை சிற்றுண்டி சுவையாக மட்டுமன்றி, ஆரோக்கியமானதாகவும் இருப்பது அவசியம். மஷ்ரூமில் பல விதமான சத்துகள் உள்ளன. இதில் வறுவல், குருமா மட்டுமின்றி, ஆம்லெட்டும் செய்யலாம்.

செய்முறை:

முதலில் மஷ்ரூம்களை நன்றாக கழுவி, சிறு, சிறு துண்டுகளாக நறுக்கவும். அடுப்பில் வாணலி வைத்து வெண்ணெய் அல்லது எண்ணெய் ஊற்றவும். சூடான பின் சிறிதாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும். அதன்பின் மஷ்ரும் துண்டுகளை சேர்த்து கிளறி, மிதமான தீயில் நான்கைந்து நிமிடங்கள் வேக வைக்கவும். ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, உப்பு, மிளகு துாள் சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும். இதில் சீஸ், பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்க்கவும். இந்த கலவையை மஷ்ரூம், வெங்காய கலவையில் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். அடுப்பில் தோசைக்கல் வைத்து, வெண்ணெய் ஊற்றவும். சூடானதும் முட்டை, மஷ்ரூம் கலவையை வட்டமாக ஊற்றவும். மிதமான தீயில் நான்கைந்து நிமிடம் வேக வைக்கவும். அதன்பின் திருப்பி போடவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக சிவந்தால், சுவையான மஷ்ரூம் ஆம்லெட் தயார். தக்காளி சாஸ் அல்லது கிரீன் சட்னியுடன் சாப்பிட்டால், சுவையாக இருக்கும். விருப்பம் இருந்தால் முட்டை, மஷ்ரூம் ஆம்லெட்டில் குடமிளகாயும் சேர்க்கலாம். சிறார்களுக்கு அதிக ஊட்டச்சத்து கிடைக்கும். சுவையும் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை