நாகேந்திரா மீண்டும் அமைச்சர்? முதல்வர் சிவகுமாருடன் சந்திப்பு
பெங்களூரு: காங்கிரஸ் எம்.எல்.ஏ., நாகேந்திரா மீண்டும் அமைச்சராக போவதாக தகவல் வெளியான நிலையில், முதல்வர் சிவகுமாரை நேற்று சந்தித்து பே சியுள்ளார். பல்லாரி ரூரல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., நாகேந்திரா. சித்தராமையா முதல்வராக இருந்த போது, பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்தார். வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேட்டால், அமைச்சர் பதவியை, 2024ல் ராஜினாமா செய்தார். சிவகுமார் முதல்வரான போது, நாகேந்திராவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைத்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் போராட்டத்தால் 2வது முறையாக ராஜினாமா செய்தார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்குவது குறித்து, கட்சிக்குள் பேச்சு அடிபடுகிறது. இதனை வீட்டு வசதி துறை அமைச்சர் ஜமீர் அகமது கானும் உறுதி செய்தார். அவர் கூறுகையில், ‘‘வரும் 10ம் தேதிக்குள் நாகேந்திரா மீண்டும் அமைச்சராக வாய்ப்பு உள்ளது,’’ என்றார். இந்நிலையில் சதாசிவநகர் வீட்டில் முதல்வர் சிவகுமாரை நேற்று நாகேந்திரா சந்தித்தார்.