உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நஞ்சன்கூடு கோவில் காளை உயிரிழப்பு

நஞ்சன்கூடு கோவில் காளை உயிரிழப்பு

மைசூரு: நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோவில் காளை நேற்று உயிரிழந்தது. பக்தர்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.மைசூரு, நஞ்சன்கூடு டவுனில் பிரசித்தி பெற்ற நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பகுதியில் காணப்பட்டதால், நஞ்சுண்டப்பா என்று பக்தர்கள் பெயர் சூட்டி அழைத்தனர்.பக்தர்களின் செல்ல பிள்ளையாக வலம் வந்த காளைக்கு 30 வயது இருக்கலாம். தினமும் பொதுமக்கள் கொடுக்கும் பழம், வெல்லம், காய்கறியை சாப்பிட்டு வந்தது.நேற்று காலை கோவிலை ஒட்டி உள்ள, கபிலா ஆற்றின் கரையோரத்தில் காளை இறந்து கிடந்தது. இதை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின், காளைக்கு அஞ்சலி செலுத்த, யுவ பிரிகேட் அமைப்பினர் ஏற்பாடு செய்தனர். பக்தர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.பூஜை செய்யப்பட்டு ஆற்றங்கரையோரம் குழிதோண்டி அடக்கம் செய்யப்பட்டது. காளை இறந்தற்கான காரணம் தெரியவில்லை. யாராவது உணவை பிளாஸ்டிக் பையுடன் சேர்த்து கொடுத்து இருக்கலாம் என்றும், அதை சாப்பிட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்து இருக்கலாம் என்றும் சிலர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ