உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஜூலை 12ல் தேசிய லோக் அதாலத் விழிப்புணர்வு கூட்டம் ஜூலை 12ல் தேசிய லோக் அதாலத் தங்கவயலில் விழிப்புணர்வு கூட்டம்

ஜூலை 12ல் தேசிய லோக் அதாலத் விழிப்புணர்வு கூட்டம் ஜூலை 12ல் தேசிய லோக் அதாலத் தங்கவயலில் விழிப்புணர்வு கூட்டம்

தங்கவயல்: தேசிய லோக் அதாலத்தை முன்னிட்டு தங்கவயல் நீதிமன்றத்தில் நேற்று விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.தங்கவயல் தாலுகா சட்டசேவை கமிட்டியின் செயலர் நீதிபதி வினோத் குமார் வரவேற்று பேசுகையில், ''தங்கவயல் நீதிமன்றத்தில் இவ்வாண்டில், இரண்டாவது தேசிய லோக் அதாலத், ஜூலை 12ம் தேதி நடக்கிறது. தங்கவயல் தாலுகா சட்டசேவை கமிட்டி சார்பில் முன்னோட்டமாக நடத்தப்படுகிறது. அனைத்து துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பு தேவை. லோக் அதாலத்தில் செய்தியாளர் பிரசாரமும் தேவை,'' என்றார். தங்கவயல் மாவட்ட முதன்மை சிவில் நீதிபதி சிவகுமார் பேசுகையில், ''தாலுகா நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை தேசிய லோக் அதாலத் நடத்தப்படுகிறது. ''நீதிமன்றத்தில் வழக்குகள் தேக்கம் ஆகாமல் தீர்வு காண வேண்டும். சமரச முயற்சியில் வழக்குகள் தீர்வுக்கு விழிப்புணர்வு தேவை. இது பலருக்கும் பயனுள்ள கூட்டமாகும்,'' என்றார்.நீதிபதி ஷமீரா நன்றி கூறினார்.நீதிபதி ஜெயலட்சுமி, வக்கீல்கள் சங்கத் தலைவர் ராஜகோபால் கவுடா, துணைத் தலைவர் மணிவண்ணன், செயலர் நாகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை