உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கர்நாடகாவில் 2028க்குள் தே.ஜ., கூட்டணி அரசு ம.ஜ.த., ஒருங்கிணைப்பு குழு தலைவர் உறுதி

கர்நாடகாவில் 2028க்குள் தே.ஜ., கூட்டணி அரசு ம.ஜ.த., ஒருங்கிணைப்பு குழு தலைவர் உறுதி

பெங்களூரு: ''கர்நாடகாவில் 2028க்குள் தேசிய ஜனநாயக கூட்டணி அரசை அமைப்பதே எங்களின் ஒரே குறிக்கோள்,'' என, ம.ஜ.த., ஒருங்கிணைப்பு குழுவின் புதிய தலைவர் கிருஷ்ணா ரெட்டி தெரிவித்தார். பெங்களூரில் அவர் கூறியதாவது: கர்நாடகாவில் ம.ஜ.த.,வை மிகவும் திறம்பட ஒழுங்கமைக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. வாரத்தில் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் கட்சியின் மாநில அலுவலகத்தில் இருப்பேன். பிற மாவட்டங்கள், தாலுகாக்களில் இருந்து வருவோரின் பிரச்னைகளை கேட்டு, தீர்த்து வைப்பேன். மாதத்துக்கு ஒரு முறை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கூட்டுவோம். மாவட்டம், தாலுகா முழுதும் சுற்றுப்பயணம் செய்வோம். திங்கள் தோறும் நடக்கும் கூட்டத்தில் கிராம பஞ்சாயத்து, ஜில்லா பஞ்சாயத்து, தாலுகா பஞ்சாயத்து, நகராட்சி தேர்தல், ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் ஐந்து மாநகராட்சிகளுக்கான தேர்தல்கள் குறித்து விவாதிக்கப்படும். இத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கான திட்டங்களை வகுப்போம். இப்போது நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதால், 2028க்குள் மாநிலத்தில் எங்கள் கூட்டணி அரசை அமைப்பதே எங்களின் ஒரே குறிக்கோள். எங்களுக்கு எத்தனை இடங்கள் தேவை என்று நாங்கள் கேட்கவில்லை. எந்த இடத்தில் ம.ஜ.த., வெல்லும் சாத்தியம் உள்ளது என்பதை கணக்கிடுவோம். எண்ணிக்கையின் அடிப்படையில் 100 அல்லது 120 இடங்களை நாங்க கேட்க மாட்டோம். எத்தனை இடங்களில் வெல்வது என்பது தான் முக்கியம். எனவே, அதற்காக நாங்கள் தயாராவோம். கட்சியின் மூத்த தலைவரான ஜி.டி.தேவகவுடாவை, அவரின் வீட்டிற்கு சென்று சந்திப்பேன். எங்கு பிரச்னை இருந்தாலும், அவற்றை தீர்க்க முயற்சிப்பேன். இங்கு 'யார் பெரியவர்' என்ற கேள்விக்கே இடமில்லை. கட்சி அமைப்புக்கு எங்கெல்லாம் பிரச்னை வருகிறதோ, அங்கெல்லாம் அந்த தலைவர்களிடம் பேசுவேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ