உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு

 முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு

ஷிவமொக்கா: ஷிவமொக்கா மாவட்டம், பத்ராவதி தாலுகாவின் மல்லாபுரா கிராமத்தில் வசிப்பவர் குஷ தொட்டப்பா. இரண்டு நாட்களுக்கு முன், உடல் நிலை சரியில்லாத தன் மகன் திப்பேஷை, ஷிவமொக்காவின் மெக்கான் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். சிகிச்சை முடிந்த பின், இரவு, 10:45 மணியளவில் இருசக்கர வாகனத்தில், வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். கிராமத்தின் அருகே செல்லும் போது, சிறுநீர் கழிப்பதற்காக வாகனத்தை நிறுத்தினார். அப்போது, குழந்தையின் அழுகுரல் கேட்டது. அக்கம், பக்கத்தில் தேடிய போது, முட்புதரில் பச்சிளம் ஆண் குழந்தை கிடந்தது தெரிந்தது. குழந்தையை எடுத்து கொண்டு, சுற்றுப்பகுதியில் பெற்றோர் உள்ளார்களா என்றும் தேடினார். அங்குள்ள வீடுகளிலும் விசாரித்தார். யாருக்கும் தெரியவில்லை. பாளஹொன்னுார் போலீஸ் நிலையத்தில், குழந்தையை ஒப்படைத்தார். அவர்கள் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தை பிறந்து மூன்று நாட்களே ஆகியிருந்தது. வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், குழந்தையின் பெற்றோரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை