உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  அடுத்த முறை தலித் முதல்வர் அமைச்சர் மஹாதேவப்பா கருத்து

 அடுத்த முறை தலித் முதல்வர் அமைச்சர் மஹாதேவப்பா கருத்து

குடகு: ''கர்நாடகாவில் அடுத்த ஆட்சியில், தலித் தலைவரே முதல்வராக வேண்டும். இதில் எந்த குழப்பமும் இருக்க கூடாது,'' என, சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா தெரிவித்தார். குடகு மாவட்டம், மடிகேரியில் நேற்று அவர் அளித்த பேட்டி: தலித் சமுதாயத்தினர், முதல்வராக வேண்டும் என்ற வலியுறுத்தல் இன்னும் அடங்கவில்லை. இப்போது சித்தராமையா முதல்வராக இருப்பதால், அடுத்த முறை தலித் தலைவர் முதல்வராக வேண்டும். தகுதியானவரை தேர்வு செய்து முதல்வர் பதவியில் அமர்த்த வேண்டும் என, முதல்வர் சித்தராமையா உட்பட, கட்சி மேலிடத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். தலித் தலைவரை முதல்வராக தேர்வு செய்வதில், எந்த குழப்பங்களும் ஏற்படக்கூடாது. ஏன் என்றால் கர்நாடகாவில் தலித்துகள், அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இவர்கள் எப்போதும் காங்கிரசின் முதுகெலும்பாக நின்றுள்ளனர். முதுகெலும்பை இழந்துவிட்டால், காங்கிரஸ் வலுவிழக்கும். முதுகெலும்பை பலப்படுத்த வேண்டும் என்றால், தலித் தலைவர் முதல்வராக வேண்டும். இந்த விஷயத்தை கட்சி மேலிடமும், கவனத்தில் வைத்துள்ளது. கட்சியில் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு விதமான ஆசைகள், எதிர்பார்ப்புகள் உருக்கும். இதை தவறு என, கூற முடியாது. ஆனால் இது தொடர்பாக, கட்சி மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி