உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஹம்பியில் நிர்மலா சீதாராமன் தரிசனம்

ஹம்பியில் நிர்மலா சீதாராமன் தரிசனம்

விஜயநகரா: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், முதன் முறையாக, ஹம்பிக்கு வந்தார். வரலாற்று பிரசித்தி பெற்ற விருபாக்ஷேஸ்வரர் கோவிலுக்கு சென்று, தரிசனம் செய்தார். மத்தி ய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நான்கு நாட்கள் கல்யாண கர்நாடக மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். யாத்கிர், ராய்ச்சூர், பீதர், பல்லாரி, கொப்பால், கலபுரகி மாவட்டங்களுக்கு செல்கிறார். இங்கு நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். விஜயநகராவுக்கு நேற்று காலை வந்த, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஹம்பியின் வரலாற்று பிரசித்தி பெற்ற விருபாக்ஷேஸ்வரர் கோவிலுக்கு சென்று, வழிபட்டார். இவர் ஹம்பிக்கு வருவது, இதுவே முதன் முறை. தரிசனத்துக்குப் பின், அவர் அளித்த பேட்டி: ஹம்பிக்கு வரும்படி பலரும், என்னிடம் கூறினர். ஹம்பிக்கு வந்து, விருபாக்ஷேஸ்வரரை தரிசிக்க, வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம். பாரம்பரியமிக்க ஹம்பிக்கு வந்ததை, பெருமையாக உணர்கிறேன். யுனெஸ்கோ அடையாளம் கண்ட, வரலாற்று பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகும். ஹம்பியில் உள்ள ஒவ்வொரு சிற்பமும், இங்குள்ள பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. இங்கு உத்சவங்களும் நடக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி