உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ராஜினாமா செய்வதாக கூறவே இல்லை காங்., - எம்.எல்.ஏ.,க்கள் 2 பேர் பல்டி

ராஜினாமா செய்வதாக கூறவே இல்லை காங்., - எம்.எல்.ஏ.,க்கள் 2 பேர் பல்டி

பெங்களூரு: காட்டு யானைகள் விவகாரத்தில், ராஜினாமா செய்வதாக நாங்கள் கூறவே இல்லை என்று, சிக்கமகளூரை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் இரண்டு பேர் திடீர் பல்டி அடித்துள்ளனர். ஹாசனில் இருந்து சிக்கமகளூரின் பத்ரா வனவிலங்கு சரணாலயத்திற்கு 56 காட்டு யானைகளை விரட்டும், வனத்துறையினர் முடிவுக்கு, சிக்கமகளூரு மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மூடிகெரே நயனா, சிருங்கேரி ராஜேகவுடா, சிக்க மகளூரு தம்மய்யா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர். ராஜேகவுடா, தம்மய்யா கூறுகையில், 'எங்கள் கஷ்டத்தை சபாநாயகரிடம் கூறியுள்ளோம். யானைகளை பத்ரா வனவிலங்கு சரணாலயத்திற்குள் விரட்டினால், எங்கள் தொகுதி மக்கள் பாதிக்கப்படுவர். ஏற்கனவே எங்கள் பகுதியில் காட்டு யானைகள் பிரச்னை உள்ளது. 'முத்தத்தி வனப்பகுதியில் 1,000 ஏக்கருக்கு மேல் இடம் உள்ளது. அங்கு வேண்டுமென்றால் யானைகளை விரட்டி அடிக்கட்டும். முதல்வர் சிவகுமாரிடமும் எங்கள் பிரச்னைகளை சொல்வோம். எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக நாங்கள் கூறவே இல்லை' என்றனர். நயனா கூறுகையில், ''பத்ரா வனவிலங்கு சரணாலயத்திற்குள் யானைகளை விரட்ட உள்ளனர் என்று தெரிந்ததும், வனத்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டியிடம் மொபைல் போனில் பேசினேன். நாடகம் ஆடும் அவசியம் எனக்கு இல்லை. ' 'மூடி கெரே மக்கள் குரலாக ஒலிக்க தான், எம்.எல்.ஏ.,வாக தேர்வாகி உள்ளேன். எனது ராஜினாமா கடிதம் இப்போதும், சபாநாயகர் அலுவலகத்தில் தான் உள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை