உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / போலி ஜாதி சான்றிதழ் மூலம் சலுகை திரும்ப பெற அதிகாரிகளுக்கு உத்தரவு

போலி ஜாதி சான்றிதழ் மூலம் சலுகை திரும்ப பெற அதிகாரிகளுக்கு உத்தரவு

பெங்களூரு: ''போலி ஜாதி சான்றிதழ் தொடர்பாக வழக்குகளில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவற்றின் மூலம் அரசு சலுகைகள் பெறப்ப ட்டுள்ளன என்பது நிரூபிக்கப்பட்டால், அவற்றை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என முதல்வர் சித்தராமையா, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினா ர். பெங்களூரு விதான் சவுதாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று 2025 - 26ம் ஆண்டுக்கான பட்டியல் ஜாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை கட்டுப்பாடு) கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. 170 போலிகள் அப்போது அவர் பேசியதாவது: போலி ஜாதி சான்றிதழ் தொடர்பான வழக்குகளில் நீதிமன்றம் தீர்ப்பளித்தும், அது நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருப்பதற்கு காரணம் என்ன. தற்போது 170 போலி ஜாதி சான்றிதழ்கள் நிரூபிக்கப்பட்டு உள்ளன. இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விஷயத்தில் துறைகள் இடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். எஸ்.சி., - எஸ்.டி.,யினர் மீதான தாக்குதல் தொடர்பான வழக்குகளில், 60 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். கடந்த ஆறு மாதங்களில் 84 சதவீத வழக்குகளுக்கு மட்டுமே குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. இனி 60 நாட்களுக்குள் இத்தகைய வழக்குகள் மீதான குற்றப்பத்திரிகை, 100 சதவீதம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்க வேண்டும். தண்டனை சம்பந்தப்பட்டவர்கள் மீது பச்சாதாபம் பார்க்காமல் நடவடிக்கை எடுங்கள். நீதிமன்றத்தில் 56 வழக்குகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை உடனடியாக முடித்து வையுங்கள். இத்தகைய வழக்குகளை விசாரிக்கவே, மாநிலத்தில் 11 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை, 10 சதவீதம் வரை மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது; இது மேலும் அதிகரிக்க வேண்டும். குற்றவாளிகளுடன் போலீசாருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண தொகை உயர்த்தப்படும். 2023 முதல் இதுவரை 6,635 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில், 4,912 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட உள்ளன. இதில், 36 வழக்குகளில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. 679 வழக்குகள் இன்னும் விசாரணை அளவில் உள்ளன. இத்தகைய வழக்குகளை விசாரிப்பதற்காகவே, மாநிலத்தில், 33 சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குநரகங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இங்கு போலீசார், ஊழியர்கள் பற்றாக்குறை இருந்தால், காலியான பதவிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை