உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மாணவியர் ஆரோக்கியம் கண்காணிக்க உத்தரவு

மாணவியர் ஆரோக்கியம் கண்காணிக்க உத்தரவு

பெங்களூரு: அனைத்து பள்ளிகளிலும் மாணவியரின் ஆரோக்கியத்தை பரிசோதிக்க, சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. யாத்கிர் மாவட்டம், ஷாஹாபுராவில் உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவிக்கு, பள்ளி கழிப்பறையில் பிரசவம் நடந்து, ஆண் குழந்தை பிறந்தது. சிறுமி கர்ப்பமாக இருந்தது, பள்ளி ஊழியர்களுக்கு தெரியவில்லை. இதை தீவிரமாக கருதிய, சுகாதாரத்துறை அனைத்து விடுதிகளிலும், மாணவியரின் ஆரோக்கியத்தை கண்காணிக்க வேண்டும். மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் என, நேற்று உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ