உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / காச நோயாளிகளுக்கு சத்துமாவு வழங்க உத்தரவு

காச நோயாளிகளுக்கு சத்துமாவு வழங்க உத்தரவு

பெங்களூரு: காச நோயாளிகளுக்கு, சிகிச்சை அளிப்பதற்கு முன், இரண்டு மாதங்கள் அவர்களுக்கு 'சத்து மாவு' வழங்கும்படி, சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, சுகாதாரத்துறை பிறப்பித்த உத்தரவு: காச நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். சிகிச்சைக்கு முன், இரண்டு மாதங்கள் சுகாதாரத்துறை சார்பில், அவர்களுக்கு சத்து மாவு வழங்க, அரசு அனுமதி அளித்துள்ளது. பயனாளிகளுக்கு மாதந்தோறும் தலா 6 கிலோ சத்து மாவு வழங்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. சுரங்க பாதிப்பு மாவட்டங்களான சித்ரதுர்கா, பல்லாரி, துமகூரை தவிர மாநிலத்தின் மற்ற மாவட்டங்களின் பயனாளிகளுக்கு அந்தந்த அங்கன்வாடி மையங்கள் மூலம், சத்து மாவு வழங்க வேண்டும். சேகரிப்பில் உள்ள சத்து மாவு கெடாமல் பாதுகாக்க வேண்டும். காச நோயாளிகளின் உடல் எடையை பரிசோதித்து, அதற்கு ஏற்ப வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ