உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  வாகன நிறுத்துமிடம் தேர்வு செய்ய உத்தரவு

 வாகன நிறுத்துமிடம் தேர்வு செய்ய உத்தரவு

பெங்களூரு: பெங்களூரில் வாகனங்கள் நிறுத்தும் இடங்களை தேர்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு கிரேட்டர் பெங்களூரு ஆணைய தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ் உத்தரவிட்டு உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ஐந்து மாநகராட்சிகளின் எல்லைக்குள் வாகன நிறுத்துமிடங்கள் கண்டறிந்து அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். தெரு விளக்குகள் முறையாக பராமரிக்கவும், அதிக ஒளி தரக்கூடிய எல்.இ.டி., விளக்குகளை தேவையான இடங்களில் பொருத்தவும் வேண்டும். சாலைப் பள்ளம் மூடப்படவும், மழைநீர் வடிகால், மெட்ரோ, கேபிள் பணிளுக்காக சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள் விரைவில் மூடப்பட வேண்டும். நடைபாதைகள் துாய்மையாக இருக்க வேண்டும். சாலை மேம்பாட்டு குறித்த டெண்டர் அறிவிப்பு விரைவில் வெளியாகும். போக்குவரத்துத் துறை அதிகாரிகள் முன்மொழிந்த சாலைகள் முதலில் சரிசெய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ