உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெலகாவியில் 10 நாள் சட்டசபை கூட்டம் போராட்டத்துக்கு தயாராகும் அமைப்புகள்

பெலகாவியில் 10 நாள் சட்டசபை கூட்டம் போராட்டத்துக்கு தயாராகும் அமைப்புகள்

பெலகாவி: சுவர்ண விதான் சவுதாவில் நடக்கவுள்ள சட்டசபை குளிர்க்கால கூட்டத்தொடரில் போராட்டம் நடத்த 150க்கும் மேற்பட்ட அமைப்புகள், சங்கங்கள் தயாராகின்றன. பெலகாவி, சுவர்ண விதான் சவுதாவில், டிசம்பர் 2ம் தேதி சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் துவங்கவுள்ளது. இதில் பல விஷயங்களை முன் வைத்து போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகளான பா.ஜ., – ம.ஜ.த., திட்டமிட்டுள்ளன. அதேபோன்று 150 க்கும் மேற்பட்ட அமைப்புகள், சங்கங்களும் போராட்டம் நடத்த தயாராகின்றன. கரும்பு விவசாயிகள், கரும்புக்கு கூடுதல் விலை நிர்ணயிக்க வலியுறுத்துகின்றனர். பஞ்சமசாலி சமுதாயத்தினர் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தவுள்ளனர். வக்கீல்கள் மீதான தாக்குதல்களை கட்டுப்படுத்த, சட்டத்தை பலப்படுத்த வலியுறுத்தியும், கவுரவ ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், மதிய உணவு தயாரிக்கும் ஊழியர்கள், மாணவர் அமைப்பினர், ஒப்பந்த ஊழியர்கள், ஆஷா ஊழியர்கள், தொழிலாளர் சங்கங்கள் உட்பட பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்த தயாராகின்றன. ஏற்கனவே 50 அமைப்புகள் போராட்டம் நடத்த, அனுமதி கேட்டுள்ளன. போராட்டங்கள் நடக்கும் என்ப தால், பெலகாவி மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல், சுவர்ண விதான் சவுதாவை சுற்றிலும் நான்கு இடங்களில் போராட்டம் நடத்த அனுமதி அளித்துள்ளது. இம்முறை கூட்டத்தொடர் பாதுகாப்புக்காக, 7,000க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்படுகின்றனர். 10 நாட்கள் நடக்கும் கூட்டத்தொடரில் போராட்டங்களை சமாளித்து, வடமாவட்டங்களின் பிரச்னைகளை பற்றி விவாதிப்பது, அரசுக்கு பெரும் சவாலாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !