உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நம்ம கலை பெங்களூரு இன்று கோலாகல துவக்கம்

நம்ம கலை பெங்களூரு இன்று கோலாகல துவக்கம்

பெங்களூரு : சித்ரகலா பரிஷத் சார்பில் இன்று முதல் ஜூன் 1ம் தேதி வரை ஐந்து நாள், 'நம்ம கலை பெங்களூரு - தேசிய கலை திருவிழா 2025' நடக்கிறது.சித்ரகலா பரிஷத் தலைவர் சங்கர் அளித்த பேட்டி:மாநில சுற்றுலா துறையுடன் சித்ரகலா பரிஷத் இணைந்து, முதன் முறையாக பெங்களூரு சித்ரகலா பரிஷத் வளாகத்தில், சித்ரகலா பரிஷத் சார்பில் மே 28 ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை, ஐந்து நாள் 'நம்ம கலை பெங்களூரு - தேசிய கலை திருவிழா 2025' நடக்கிறது.உள்நாடு, வெளிநாட்டின் பிரபலமான ஓவியர்களின் படைப்புகள் இதில் இடம் பெறுகின்றன. ஓவியர்களை தேர்வு செய்ய கமிட்டி நியமிக்கப்பட்டிருந்தது. இவர்கள் நுாற்றுக்கும் மேற்பட்ட ஓவியர்களை சந்தித்து, அழைப்பு விடுத்துள்ளனர். ஒவ்வொரு ஓவியருக்கும் தேவையான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.கர்நாடகாவின் 51, தமிழகத்தின் 17, மஹாராஷ்டிராவின் 12, புதுடில்லியின் 6, கேரளாவின் 2, மத்திய பிரதேசத்தின் ஒன்று, புதுச்சேரியின் ஒன்று, தெலங்கானாவின் ஒன்று மற்றும் வெளிநாட்டு ஓவியர்கள் பங்கேற்கின்றனர். இத்தகைய ஓவிய கண்காட்சி, புதுடில்லியில் நடந்து உள்ளது. அடுத்தாண்டு முதல் இக்கண்காட்சி மார்ச்சில் நடத்தப்படும்.ஓவிய கண்காட்சி மட்டுமின்றி பிரபலமானவர்களின் கருத்தரங்கு, ஆலோசனைகளும் இடம் பெறும். கண்காட்சிக்காக எந்த கமிஷனும் பரிஷத் வாங்காது. பொது மக்கள் வாகனங்கள் நிறுத்த, கிரசன்ட் சாலையின் ஒரு புறமும்; சேவா தள் பள்ளி வளாகமும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதை பொது மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.பெங்களூரில் நடக்கும் ஓவிய கண்காட்சி போன்று, மாநிலத்தின் வட மாவட்டங்களிலும் நடத்த வேண்டும் அப்பகுதி மக்கள், அரசியல் பிரமுகர்கள் கேட்டுள்ளனர். வட மாவட்டத்துக்கு வந்து ஓவியங்கள் வாங்கி செல்ல வாடிக்கையாளர்கள் தயாராக இருந்தால், கண்காட்சி நடத்த தயாராக இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை