2028, 2029ல் தான் எங்கள் இலக்கு பா.ஜ., துணை தலைவர் சூளுரை
ஹூப்பள்ளி: பா.ஜ., தேசிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட, ராஜ்யசபா எம்.பி., நாகராஜ் நேற்று, ஹூப்பள்ளியில் அளித்த பேட்டி: கர்நாடகாவில் 2028 சட்டசபை தேர்தலும், 2029ல் மோடி 4.0 என்பதும் தான் எங்கள் இலக்கு. 2028ல் எந்த காரணத்துக்காகவும், கர்நாடகாவில் பா.ஜ., தோற்காது. கடந்த தேர்தலிலும் பா.ஜ., ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும். பல்வேறு காரணங்களால் அது தோல்வியடைந்தது. அடுத்த தேர்தலில், பா.ஜ.,வை ஆட்சிக்கு கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படும். நாங்கள் ம.ஜ.த.,வுடன் இணைந்து பணியாற்றி, வெற்றி பெறுவோம். மாநில தலைவர் விஜயேந்திரா, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் வழிகாட்டுதலின் கீழ், கட்சியை ஒருங்கிணைப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.