மேலும் செய்திகள்
வில்லியனுார் கொம்யூனில் கிராம சபை கூட்டம்
27-Jan-2026
பெங்களூரு: ''கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான தேர்தல் விரைவில் நடத்தப்படும்,'' என அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்து உள்ளார். சட்டசபையில் பா.ஜ., உறுப்பினர் தொட்டனகவுடா ஹனமகவுடா பாட்டீல், “மாநிலத்தில் கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. எனவே, அடுத்த தேர்தல் நடக்கும் வரை, தற்போது பதவியில் இருப்பவர்களே உறுப்பினராக தொடர வேண்டும்,'' என கோரினார். இதற்குகிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே அளித்த பதில்: கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களின் பதவிக்காலம் மார்ச் மாதம் இறுதியுடன் முடிவடைகிறது. அடுத்த தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் தேர்தலுக்கு தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.மாநில அரசு விரைவில் தேர்தலை நடத்தும். ஒரு வேளை அடுத்த தேர்தல் நடத்த தாமதமானால், பஞ்சாயத்து உறுப்பினர்கள் பதவியில் தொடருவர். இவ்வாறு அவர் கூறினார்.
27-Jan-2026