உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சிக்கமகளூரு  - திருப்பதி ரயில் பெயர் வைப்பதில் பஞ்சாயத்து 

சிக்கமகளூரு  - திருப்பதி ரயில் பெயர் வைப்பதில் பஞ்சாயத்து 

சிக்கமகளூரு:சிக்கமகளூரில் இருந்து திருப்பதிக்கு வரும் 18ம் தேதி முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலுக்கு பெயர் வைப்பதில், இரு சமூகத்தினர் இடையில் பஞ்சாயத்து ஏற்பட்டு உள்ளது.சிக்கமகளூரில் இருந்து திருப்பதிக்கு பெங்களூரு வழியாக வரும் 18ம் தேதி முதல் வெள்ளிக் கிழமைகளில், வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலின் துவக்க விழா சிக்கமகளூரில் நேற்று முன்தினம் நடந்தது. விழா முடிந்ததும், ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணாவிடம், சிக்கமகளூரு - திருப்பதி ரயிலுக்கு, 'தத்தாத்ரேயா' என்று பெயர் சூட்ட வேண்டும் என, உடுப்பி - சிக்கமகளூரு பா.ஜ., - எம்.பி., கோட்டா சீனிவாஸ் பூஜாரி, மேல்சபை துணை தலைவர் பிரானேஷ், எம்.எல்.சி., ரவி ஆகியோர் கோரிக்கை வைத்தனர்.இதுகுறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் பேசுவதாக, சோமண்ணாவும் உறுதி அளித்தார். ஹிந்து அமைப்பினர் ரயிலுக்கு, 'தத்தாத்ரேயா' என்றே பெயர் சூட்டப்படும் என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இதற்கு இன்னொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். 'பாபாபுடன் தான் சிக்கமகளூரில் காபி தோட்டங்களை நிறுவி, இம்மாவட்டத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினார். இதனால் அவரது பெயரை வைக்க வேண்டும்' என்று, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கும் இது தொடர்பாக, அவர்கள் கடிதம் எழுத உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ