உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  எஸ்.சி., - எஸ்.டி., மாணவர் கல்வி ஊக்கத்தொகை உயர்த்த பரமேஸ்வர் உறுதி

 எஸ்.சி., - எஸ்.டி., மாணவர் கல்வி ஊக்கத்தொகை உயர்த்த பரமேஸ்வர் உறுதி

பெங்களூரு: ''எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி ஊக்கத்தொகை உயர்த்துவது குறித்து, முதல்வருடன் ஆலோசிக்கப்படும்,'' என, துணை முதல்வர் பரமேஸ்வர் தெரிவித்தார். பெங்களூரு விதான் சவுதாவில் தலித் சங்கர்ஷ சமிதி நிர்வாகிகளுடன் நேற்று துணை முதல்வர் பரமேஸ்வர் ஆலோசனை நடத்தினார். பின், அவர் அளித்தபேட்டி: எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி ஊக்கத்தொகை, தற்போதைய கல்வி செலவுகளை ஈடுகட்ட போதுமானதாக இல்லை என்று கூறினர். மாணவர்களுக்கு கூடுதல் நிதியுதவி வழங்குவது குறித்து முதல்வருடன் ஆலோசித்து உரிய முடிவெடுக்கப்படும். கர்நாடக எஸ்.சி., - எஸ்.டி., நில பரிமாற்ற தடை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டபோதும், அது திறம்பட அமல்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தகுதி உள்ள அனைத்து தலித் குடும்பங்களுக்கும் அரசு வாக்குறுதி திட்டங்கள் சென்றடையாதது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அரசின் திட்டங்களின் பலன்கள் கிடைக்கவில்லை என்பதை ஆராய்ந்து, தகுதியானவர்களுக்கு இத்திட்டங்கள் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும். வனப்பகுதியில் வசிக்கும் எஸ்.டி.,யினரை வனத்துறை வெளியேற்றுவது குறித்து வனத்துறை அதிகாரிகளுடன் அரசு பேச்சு நடத்தும். மனிதாபிமான, சட்டப்பூர்வமாக தீர்வு காணும். அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்புவது குறித்து சம்பந்தப்பட்ட துறையினருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை