அரசு பஸ் மோதி பெற்றோர், மகன் பலி
மைசூரு: மைசூரில் பைக் பின்னால், அரசு பஸ் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், மகன் உயிரிழந்தனர். சாம்ராஜ் நகர் மாவட்டம், உத்தனுார் கிராமத்தை சேர்ந்தவர்கள் சிவமூர்த்தி, 52, அவரது மனைவி சென்னஜம்மா, 46, மகன் சித்தார்த், 15. மைசூரு சென்றிருந்த இவர்கள், நேற்று முன்தினம் இரவு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். நஞ்சன்கூடின் சாமுண்டி டவுன்ஷிப் அருகே சென்றபோது, பின்னால் வந்த கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ், இவர்கள் பயணம் செய்த பைக்கின் பின்புறம் மோதியது. இதில், சித்தார்த், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிவமூர்த்தியும், சிகிச்சை பலனின்றி சென்னஜம்மாவும் உயிரிழந்தனர். நஞ்சன்கூடு போக்குவரத்து போலீசார், பஸ்சை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.