மேலும் செய்திகள்
வால்மீகி ஜெயந்தி தங்கவயலில் விழா
08-Oct-2025
தங்கவயல்: ''தங்கவயல் புல் மார்க்கெட் பகுதியில் வாகன நிறுத்துமிடம் அமைக்க வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும்,'' என, தங்கவயல் எம்.எல்.ஏ., ரூபகலா வலியுறுத்தினார். ராபர்ட்சன் பேட்டையில் நகராட்சிக்கு சொந்தமான புல் மார்க்கெட் பகுதியில் காலியான இடத்தில் 'பார்க்கிங்' வசதியை ஏற்படுத்த நகராட்சி தீர்மானித்தது. இதற்காக இடையூறாக இருக்கும் கட்டடங்களை இடிக்க நகராட்சி முடிவு செய்தது. இதனால் கடை உரிமையாளர்களுக்கும் நகராட்சி நிலைக் குழு தலைவர் வி.முனிசாமிக்கும் தகராறு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த தங்கவயல் எம்.எல்.ஏ., ரூபகலா, நேற்று காலை புல் மார்க்கெட் வியாபாரிகளுடன் பேச்சு நடத்தினார். அவர் பேசியது: தங்கவயலை மேம்படுத்த பல திட்டங்கள் அமல்படுத்த வேண்டியுள்ளது. இதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. இங்கு பெரிய அளவில் கடைகள் கட்டப்பட உள்ளன. அப்போது இங்கு யாருக்கெல்லாம் கடைகள் உள்ளனவோ, அவர்களுக்கு கட்டாயம் கடைகள் வழங்கப்படும். தங்கவயல் மேம்பாட்டுக்கு ரிசர்வ் போலீஸ் படையின் பயிற்சி நிலையம் ஏற்படுத்த திட்டமிடப்படுகிறது. தொழிற்பூங்காவும் அமைகிறது. எனவே இங்கு 'பார்க்கிங்' வசதி அவசியம் தேவை. வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு பேசினார். அப்போது நகராட்சி ஆணையர் ஆஞ்சநேயலு, நிலைக் குழு தலைவர் முனிசாமி, வார்டு கவுன்சிலர் ரமேஷ் ஜெயின் ஆகியோரும் இருந்தனர்.
08-Oct-2025