ஜோலார்பேட்டை ரயில் 24ல் ஒரு பகுதி ரத்து
ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, ஜோலார்பேட்டை - பெங்களூரு உட்பட, நான்கு ரயில்களின் சேவையில், வரும் 24ம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிக்கை: ஜோலார்பேட்டை ரயில்வே பணிமனையில், பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், வரும் 24ம் தேதி, சில ரயில்களின் சேவையில், மாற்றம் செய்யப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலம், கே.எஸ்.ஆர்., பெங்களூரு - ஜோலார்பேட்டை காலை 8:45 மணி ரயில், சோமநாயக்கன்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும் ஜோலார்பேட்டை - கே.எஸ்.ஆர்., பெங்களூரு மாலை 3:00 மணி ரயில், சோமநாயக்கன்பட்டியில் இருந்து இயக்கப்படும் ஈரோடு - ஜோலார்பேட்டை காலை 6:00 மணி ரயில், திருப்பத்துார் வரை மட்டுமே இயக்கப்படும் ஜோலார்பேட்டை - ஈரோடு மதியம் 2:45 மணி ரயில், திருப்பத்துாரில் இருந்து இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. - நமது நிருபர் -