உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கணவாய் மீன் கிரேவி

கணவாய் மீன் கிரேவி

– நமது நிருபர் –: முள் மற்றும் செதில்கள் இல்லாத கணவாய் மீன், குறைந்த கொழுப்பு, அதிக ஊட்டச்சத்து நிறைந்த சிறந்த கடல் உணவாகும். இதை, கிரேவியாக செய்து சாப்பிட சுவையாக இருக்கும். எப்படி செய்வது என பார்ப்போம். தேவையான பொருட்கள் வறுத்து அரைக்க l தனியா விதை: 2 டேபிள் ஸ்பூன் l சீரகம்: 1 டீஸ்பூன் l சோம்பு: 1 டீஸ்பூன் l மிளகு: 1 டீஸ்பூன் l காய்ந்த மிளகாய்: 3 அல்லது 4 l பட்டை, கிராம்பு, ஏலக் காய்: தலா 2 l துருவிய தேங்காய்: 3 டேபிள் ஸ்பூன் முக்கிய பொருட்கள் l கணவாய் மீன்: அரை கிலோ l பொடியாக நறுக்கிய சின்ன l வெங்காயம்: 15 முதுல்- 20 l பொடியாக நறுக்கிய தக்காளி: 2 l இஞ்சி பூண்டு பேஸ்ட்: 1 டேபிள் ஸ்பூன் l மஞ்சள் துாள்: கால் டீஸ்பூன் l நல்லெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய்: 3 டேபிள் ஸ்பூன் l கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை: தேவையான அளவு l உப்பு: தேவையான அளவு செய்முறை செட்டிநாடு மசாலா தயார் செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றாமல் மல்லி, சீரகம், சோம்பு, மிளகு, வரமிளகாய், பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை மிதமான தீயில் வாசம் வரும் வரை வறுக்கவும். ஆறிய பின், இதனுடன் துருவிய தேங்காயை சேர்த்து மிக்ஸியில் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து மென்மையான விழுதாக அரைத்து தனியாக வைக்கவும். கிரேவி செய்முறை கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும் தக்காளியை சேர்த்து, தக்காளி நன்றாகக் குழைந்து தொக்கு பதத்திற்கு வரும் வரை வதக்கவும். சுத்தம் செய்து நறுக்கிய கணவாய் மீன், மஞ்சள் துாள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். கனவாய் மீனை 2 நிமிடங்கள் நன்றாக வதக்க வேண்டும். மீன் லேசாக சுருண்டு வரும்போது, நாம் அரைத்து வைத்துள்ள செட்டிநாடு மசாலா விழுதை சேர்த்து கலக்கவும். கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும். மிதமான தீயில் 10 முதல் 12 நிமிடங்கள் வேக விடவும். கணவாய் மீன் சீக்கிரம் வெந்துவிடும், அதிக நேரம் வேக வைத்தால் ரப்பர் போல கடினமாகிவிடும். எண்ணெய் பிரிந்து கிரேவி திக்கான பதத்திற்கு வந்ததும், நறுக்கிய கொத்தமல்லி தழையை துாவி இறக்கினால், மணமணக்கும் செட்டிநாடு கணவாய் கிரேவி தயார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !