உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கோலார் அரசு மருத்துவமனையில் ஏசி பழுதால் நோயாளிகள் அவதி

கோலார் அரசு மருத்துவமனையில் ஏசி பழுதால் நோயாளிகள் அவதி

கோலார்; ஏற்கனவே கோடை என்பதால், வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ளது. இச்சூழ்நிலையில், கோலார் மாவட்ட அரசு மருத்துவமனையின், ஐ.சி.யு., பிரிவில் கடந்த ஒரு வாரமாக, ஏ.சி., பழுதடைந்துள்ளது.வெப்பத்தை தாங்க முடியாமல், நோயாளிகள் அவதிப்படுகின்றனர். சில நோயாளிகள் வீட்டில் இருந்து மின் விசிறி கொண்டு வந்துள்ளனர். சில நோயாளிகளுக்கு குடும்பத்தினர் விசிறி விடுகின்றனர்.சரியான காற்று வசதி இல்லாததால், மருத்துவமனை ஊழியர்கள், நேற்று மற்றொரு ஐ.சி.யு., பிரிவுக்கு நோயாளிகளை மாற்றினர். நோயாளிகளும், உறவினர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.குளிர்ச்சாதன இயந்திரம் பழுதடைந்தவுடனேயே, நோயாளிகளை மாற்றியிருந்தால் அவதிப்பட நேர்ந்திருக்காது என, உறவினர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !