| ADDED : செப் 26, 2026 11:16 PM
பெங்களூரு: ரேணுகாசாமி கொலை வழக்கில், சிறையில் உள்ள பவித்ரா கவுடா தாக்கல் செய்த ஜாமின் மனுவை, நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சித்ரதுர்காவின் ரேணுகாசாமியை கொலை செய்த வழக்கில், நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ராகவுடா கைதாகி, சிறையில் அடைபட்டுள்ளனர். இருவரும் இன்னும் ஜாமின் கிடைக்காமல், பரிதவிக்கின்றனர். ஜாமின் கோரி, பெங்களூரின் 59வது சி.சி.ஹெச்., நீதிமன்றத்தில், பவித்ரா கவுடா ஜாமின் கோரி, மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி சுஜாதா சம்ப்ரானி முன்னிலையில், நேற்று விசாரணை நடந்தது. அப்போது, பவித்ரா கவுடா தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பாலன், வக்கீல் நாராயண சாமி, 'இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளிடம் விசாரணை முடிந்துள்ளது. பவித்ரா கவுடா, சிங்கள் மதர். தன் மகளின் கல்வி, ஆரோக்கியம் மற்றும் மகளின் எதிர்காலத்தை பார்க்க வேண்டியுள்ளது. மனித நேயம் அடிப்படையில், பவித்ரா கவுடாவுக்கு ஜாமின் வழங்க வேண்டும்' என வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், இவர்களின் வாதத்தை, நிராகரித்த நீதிபதி சுஜாதா சம்ப்ரானி, பவித்ரா கவுடாவின் மனுவை தள்ளுபடி செய்தார்.