உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சுத்தமானது பூங்கா சிறுத்தைக்கு மக்கள் நன்றி

 சுத்தமானது பூங்கா சிறுத்தைக்கு மக்கள் நன்றி

பெங்களூரு: மூன்று நாட்களாக துாக்கத்தை கெடுத்த சிறுத்தைக்கு, பேடரஹள்ளி மக்கள், நன்றி தெரிவித்துள்ளனர். பெங்களூரு, பேடரஹள்ளியின், பாரத்நகரில் உள்ள பூங்காவில், கடந்த மூன்று நாட்களுக்கு முன், அதிகாலையில், பொதுமக்கள் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிறுத்தையை கண்டு, பீதியடைந்து பூங்காவை விட்டு ஓடினர். இது குறித்து, தகவலறிந்த வனத்துறையினர், சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். எனினும், அந்த சிறுத்தை சிக்காமல் ஆட்டம் காட்டுகிறது. இதனால், வனத்துறையினர் பூங்காவில் வளர்ந்துள்ள தேவையற்ற செடி, கொடிகளை அகற்றி வருகின்றனர். சிறுத்தை நடமாடிய இடத்தில் கூண்டு வைத்துள்ளனர். போலீசார், வனத்துறையினர் ரோந்து சுற்றி வருகின்றனர். 'பாழ டைந்து கிடந்த பூங்காவை சுத்தம் செய்யும்படி, அதிகாரிகளிடம் மன்றாடியும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. சிறுத்தை பதுங்குவதை தடுக்க, புதர்களை வெட்டி சுத்தம் செய்துள்ளனர். சிறுத்தைக்கு நன்றி' என, அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை