மைசூரு விமான கண்காட்சியில் சாரங்க் சாகசத்தை கண்டு மெய்சிலிர்த்த மக்கள்
தசராவை ஒட்டி, மைசூரில் நேற்று விமான கண்காட்சி நடந்தது. 'சாரங்க்' ஹெலிகாப்டர்கள், வானில் நிகழ்த்திய சாகசங்களை பார்த்து, மக்கள் மெய்சிலித்தனர். மைசூரு தசராவையொட்டி பன்னிமண்டபம் தீப்பந்து விளையாட்டு மைதானத்தில், விமான கண்காட்சி நடக்கும் என்று, அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கடந்த 25ம் தேதி ஐந்து 'சாரங்க்' ஹெலிகாப்டர்கள் ஒத்திகை நடத்தின. இதை பார்க்க மக்கள் அனுமதிக்கப்பட்டனர். நேற்று மாலை 4:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை, அரைமணி நேரத்திற்கு அதிகாரப்பூர்வமாக, விமான கண்காட்சி நடந்தது. பாஸ் இருந்தவர்கள் மட்டுமே, விமான கண்காட்சியை பார்க்க அனுமதிக்கப்பட்டனர். அரைமணி நேரம், ஐந்து சாரங்க் ஹெலிகாப்டர்களும் வானில் வர்ணஜாலம் நிகழ்த்தின. வண்ண, வெள்ளை புகைகளை கக்கியபடி பறந்தன. நேருக்கு நேர் மோதுவது போன்று வந்த ஹெலிகாப்டர்கள் பக்கத்தில் வந்ததும் திரும்பிச் சென்றது, மக்களை மெய்சிலிர்க்க வைத்தது. பலரும் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். DSC_6230 வண்ண புகையை கக்கியபடி சென்ற ஹெலிகாப்டர். DSC_6324 வானில் ஒரே இடத்தில் கூடிய ஐந்து ஹெலிகாப்டர்கள். DSC_6149 புகையை கக்கியபடி பறந்து சென்ற ஹெலிகாப்டர்கள். DSC_6518 ஹெலிகாப்டர்கள் செய்யும் சாசகம் பற்றி அறிவிப்பு வெளியிட்ட பெண் விமானி.