செல்லப்பிராணிகளுக்கு பூங்கா
கால்நடை விலங்குகள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், தடுப்பூசி செலுத்தவும் 1.12 கோடி ரூபாய் ஒதுக்கீடு. 70 சதவீத தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு, தடுப்பூசி போடப்படும். தத்தெடுக்கப்பட்ட தெருநாய்களுக்கு இலவச தடுப்பூசி, மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். உரிமம் பெற்ற இறைச்சி கூடம் அமைக்கப்படும். ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், செல்லப்பிராணிகளுக்காக குறைந்தது ஒரு பூங்கா அமைக்கப்படும். 200 நாய் கூண்டுகள் கொண்ட விலங்கு இனப்பெருக்க கட்டுப்பாடு மையம் அமைப்பதற்கும், தெருநாய்களுக்கான காப்பகம் அமைக்கவும் 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு.