பெங்களூரில் 650 மரங்களை வெட்ட திட்டம்
பெங்களூரு: கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு, 650க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டுவதற்கு ஜி.பி.ஏ.,விடம் குடிநீர் வாரியம் அனுமதி கோரி உள்ளது. பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம், தொட்டபலே, மல்லசந்திரா பகுதிகளில் இரண்டு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க திட்டமிட்டது. இதற்காக, 2 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இதற்காக, 650க்கும் மேற்பட்ட மரங்களை வெட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த மரங்களை வெட்டுவதற்கு, ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய வனப்பிரிவிடம் முறையிட்டது. இது குறித்து, ஆட்சேபனை தெரிவிக்க ஜி.பி.ஏ., வனப்பிரிவு 10 நாட்கள் கால அவகாசம் அளித்து உள்ளது. பொது மக்களின் கருத்துகளை கேட்ட பின், மரங்கள் வெட்டுவது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.