உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / குக்கே சுப்ரமண்ய சுவாமி கோவிலில் பிளாஸ்டிக் தடை

குக்கே சுப்ரமண்ய சுவாமி கோவிலில் பிளாஸ்டிக் தடை

தட்சிணகன்னடா: சுள்ளியாவின், பிரசித்தி பெற்ற குக்கே சுப்ரமண்யா கோவிலில், நாளை முதல், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படுகிறது. கோவில் நிர்வாக கமிட்டி தலைவர் ஹரிஷ் இஞ்சாடி அறிக்கை: ஹிந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கும்படி, அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி கோவில்களில், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 15 நாளை முதல், இந்த விதிமுறை அமலுக்கு வருகிறது. கோவில்களில் குடிநீர் பாட்டில் உட்பட, எந்த பிளாஸ்டிக் பொருட்களும் பயன்படுத்த கூடாது. கோவில்களின் சுற்றுப்பகுதிகள், வர்த்தக வளாகங்களில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக்களை விற்பது, சேகரித்து வைப்பது, பயன்படுத்துவது கூடாது. ஒருவேளை பயன்படுத்துவது தெரிந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து, கோவில் கட்டுப்பாட்டில் உள்ள கடைகள், வளாகங்களில் உள்ள கடைகளுக்கு, ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும். கடைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ