உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கொலை வழக்கில் தேடப்பட்டவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்

கொலை வழக்கில் தேடப்பட்டவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்

விஜயபுரா: கர்ப்பிணி மனைவியின் கண் முன்னே, கணவரை கொலை செய்த நபரை, போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இது குறித்து, விஜயபுரா எஸ்.பி., லட்சுமண் நிம்பரகி அளித்த பேட்டி: விஜயபுரா நகரின், டக்கே கிராமத்தில் வசித்தவர் யாசின் ஜுபேர், 35. இவர் கடந்த 5ம் தேதி, தன் கர்ப்பிணி மனைவியை மருத்துவ பரிசோதனைக்காக, முன்டவாடியின் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இத தொடர்பாக, காந்தி சவுக் போலீசார் விசாரணை நடத்திய போது, கொலையில் தொடர்புள்ள சமீர் முல்லா, அத்தாலட்டி கிராமத்தின் அருகில் பதுங்கி இருப்பது தெரிந்தது. அவரை கைது செய்ய, போலீசார் நேற்று அங்கு சென்றனர். போலீசாரை கண்ட சமீர் முல்லா, நாட்டுத் துப்பாக்கியால் போலீசாரை சுட்டுவிட்டு, தப்பியோட முயற்சித்தார். போலீசார் எச்சரித்தும் பொருட்படுத்தாமல், தாக்க முற்பட்டார். போலீசார் தற்காப்புக்காக சுட்டதில், காலில் குண்டு பாய்ந்து கீழே விழுந்த சமீர் முல்லாவை கைது செய்தனர். கொலையான யாசின் ஜுபேரும், சமீர் முல்லாவும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள்; அறிமுகம் உள்ளவர்கள். உரூஸ் நிகழ்ச்சியில் சவுண்ட் பாக்ஸ் விஷயத்தில், இரண்டு குழுவினருக்கும் தகராறு நடந்தது. அப்போது யாசின் கோஷ்டியினர், சமீர் முல்லா கோஷ்டியினரை தாக்கினர். இதை பற்றி அக்டோபர் 19ல், ஊரக போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவானது. யாசின் ஜுபேர் உட்பட நால்வர் கைதாகினர். யாசின் ஜுபேர், ஜாமினில் வெளியே வந்தார். தங்களை தாக்கிய காரணத்தால், பழி வாங்கும் நோக்கில் இவரை, சமீர் முல்லாவும், அவரது கூட்டாளிகளும் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தது, விசாரணையில் தெரிந்தது. கொலையில் தொடர்பு கொண்ட ரஷீத், இர்ஷாத், கதீர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ