உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / திருட வர மறுத்தவருக்கு கத்திக்குத்து தப்பியோடியவருக்கு போலீஸ் வலை

திருட வர மறுத்தவருக்கு கத்திக்குத்து தப்பியோடியவருக்கு போலீஸ் வலை

ஹாசன்: இரும்புக் கம்பிகளை திருட வரவில்லை என்பதால் கூட்டாளியை கத்தியால் குத்திவிட்டு தப்பிய நபரை போலீசார் தேடுகின்றனர்.சித்ரதுர்காவை சேர்ந்தவர் சித்ர லிங்கேஸ்வரா என்ற சிவண்ணா, 35. இவர் ஹாசன் நகரின் சிட்டி பஸ் நிலையம் அருகில் வசிக்கிறார். பழைய இரும்பு பொருட்களை வாங்கி, விற்கும் கடையில் வேலை செய்கிறார். நேற்று முன் தினம் இரவு, என்.ஆர்.சதுக்கத்தில் அவர் இருந்தபோது, கூட்டாளி சேத்தன், 38, அங்கு வந்தார்.மது அருந்த சேத்தன் அழைத்துள்ளார். இருவரும் அதே பகுதியில் இருந்த பாருக்கு சென்று, மது அருந்தினர். அப்போது சேத்தன், 'ஒரு இடத்தில் இரும்புக் கம்பிகள் உள்ளன. நாம் அங்கு சென்று கம்பிகளை திருடி விற்றால், பணம் கிடைக்கும்' என கூறினார்.இதற்கு உடன்பட மறுத்த சிவண்ணா, 'என்னால் அலைந்து திரிய முடியாது. இப்போதே இரவு 9:30 மணியாகிவிட்டது. 'என்னால் வர முடியாது' என்றார். கோபம் அடைந்த சேத்தன், 'உனக்கு என் செலவில் சரக்கு வாங்கி கொடுத்தேன்; உணவும் வாங்கி கொடுத்தேன். நீ வராவிட்டால், உன்னை தீர்த்துக் கட்டுவேன்' என மிரட்டினார்.அப்போதும் வர மறுத்த சிவண்ணா, பாரில் இருந்து வெளியே வந்தார். பின் தொடர்ந்து வந்த சேத்தன், தன் பாக்கெட்டில் இருந்த பட்டன் கத்தியை எடுத்து, சிவண்ணாவின் கழுத்து, வயிற்றில் குத்த முயன்றபோது, அவர் தப்பியோட துவங்கினார்.அவரை விரட்டிச் சென்ற சேத்தன், சிவண்ணாவின் இடது கண் அருகிலும், முழங்கையிலும் கத்தியால் குத்திவிட்டு தப்பினார்.இதை பார்த்த அப்பகுதியினர், காயமடைந்து விழுந்து கிடந்த சிவண்ணாவை, மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.அங்கு வந்த ஹாசன் நகர் போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கண்டு, சேத்தனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை