உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ரூ.11 லட்சம் திருடிய போலீஸ் ஏட்டு கைது

 ரூ.11 லட்சம் திருடிய போலீஸ் ஏட்டு கைது

பெங்களூரு: சைபர் மோசடி வழக்கில் கைதானவரின், காரில் இருந்த 11 லட்சம் ரூபாயை திருடிய, போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டு உள்ளார். பெங்களூரை சேர்ந்தவர் பவன். சைபர் மோசடி வழக்கில் இவரை கடந்த மாதம், சி.சி.பி., சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். விசாரணைக்காக போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். பவன் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்கு பின் பவன் கைது செய்யப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு அவர் ஜாமினில் வந்தார். காரை சோதனை செய்த போது, பையில் வைத்திருந்த 11 லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரிந்தது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். கண்காணிப்பு கேமரா காட்சிகளை சோதனை செய்த போது, சைபர் கிரைம் பிரிவு ஏட்டு சபியுல்லா பணத்தை திருடியது தெரிந்தது. அவரது வீட்டிற்கு சென்ற போலீசார், கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த 2 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். மீதம் 9 லட்சம் ரூபாயில் தனது மனைவிக்கு விலை உயர்ந்த நகைகளை அவர் பரிசளித்தது தெரிந்தது. சபியுல்லாவை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை