ரவுடிகள் வீடுகளில் போலீசார் சோதனை
பெங்களூரு : பெங்களூரின் பல்வேறு இடங்களில், நுாற்றுக்கணக்கான ரவுடிகளின் வீடுகளில், போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.பெங்களூரின் வடக்கு மண்டல பகுதிகளில் டி.சி.பி., நேமகவுடா உத்தரவுப்படி, ஏ.சி.பி.,க்கள் தலைமையில் 13 போலீஸ் நிலையங்களின் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், ஏட்டுகள் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, ரவுடிகளின் வீடுகளில் திடீர் சோதனை நடத்தினர். 216 ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடந்தது.ரவுடிகளை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவர்கள் தற்போது செய்யும் தொழில், மொபைல் எண், குடும்ப உறுப்பினர்கள் பற்றிய விபரங்களை கேட்டறிந்தனர். ஏதாவது குற்றங்களில் ஈடுபடுகின்றனரா என்பதை ஆய்வு செய்தனர்.'எந்த காரணத்தை முன்னிட்டும், ரவுடியிசம் செய்யக்கூடாது. சமுதாயத்தில் அமைதியை குலைக்கும்படி நடக்காதீர்கள். பொது மக்களை மிரட்டக் கூடாது. குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரித்து அனுப்பினர்.போலீசார் சோதனைக்கு வந்ததால், ரவுடிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.