உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பள்ளி கட்டடத்தில் பட்டாசு பறிமுதல் செய்த போலீசார்

பள்ளி கட்டடத்தில் பட்டாசு பறிமுதல் செய்த போலீசார்

ஷிவமொக்கா: பள்ளி கட்டடத்தின் மேற்பகுதியில் பெருமளவில் பட்டாசுகள் சேகரித்து வைத்திருந்ததைக் கண்டறிந்த போலீசார், அவற்றை பறிமுதல் செய்தனர். ஷிவமொக்கா நகர், ஜெயநகரின் இரண்டாவது கிராசில், ‘கிட்ஸ்’ என்ற தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளி கட்டடத்தின் மேற்பகுதியில், தீபாவளிக்காக அதிகளவில் பட்டாசுகள் சேகரித்து வைத்திருந்தனர். சிறுவர்கள் படிக்கும் பள்ளியில் பட்டாசுகள் இருப்பதைக் கவனித்த அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். நேற்று காலை, ஷிவமொக்கா எஸ்.பி., தலைமையிலான அதிகாரி கள், சோதனை நடத்தி,. அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். மேலும் பட்டாசு உரி மையாளரை வரவழைத்து கண்டித்தனர். அந்நபர் தன்னுடைய குடோன், காலியாக இல்லாததால், பள்ளி கட்டடத்தின் மீது வைத்திருந்ததை ஒப்புக்கொண்டார். பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ