உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தொல்லை வாலிபரை கண்டறிய முடியாமல் போலீசார் திணறல்

தொல்லை வாலிபரை கண்டறிய முடியாமல் போலீசார் திணறல்

சுத்தகுண்டபாளையா : பெங்களூரு பி.டி.எம்., லே - அவுட் சுத்தகுண்டேபாளையாவில், கடந்த 4ம் தேதி அதிகாலை 2:00 மணிக்கு இரண்டு இளம்பெண்கள், சாலையில் தனியாக நடந்து சென்றனர். அவர்களை பின்தொடர்ந்து சென்ற ஒரு வாலிபர், ஒரு இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துத் தப்பினார்.பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்கவில்லை என்றாலும், சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடங்கிய வீடியோ அடிப்படையில், போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். அந்த வாலிபரை பிடிக்க நான்கு தனிப்படை அமைக்கப்பட்டது.வாலிபர், தமிழகத்திற்கு பைக்கில் தப்பிச் சென்றதை போலீசார் உறுதி செய்தனர். இதனால் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஓசூர் வரை உள்ள 1,600 கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். ஆனால் வாலிபரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவரை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர். வாலிபர் வட மாநிலத்திற்கு தப்பிச் சென்று இருக்கலாம் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை