உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பா.ஜ., - எம்.எல்.ஏ., குறித்து அவதுாறு போஸ்டர்கள்

பா.ஜ., - எம்.எல்.ஏ., குறித்து அவதுாறு போஸ்டர்கள்

மல்லேஸ்வரம்: பா.ஜ., - எம்.எல்.ஏ., அஸ்வத் நாராயண் குறித்து அவதுாறாக அடையாளம் தெரியாத நபர்கள் போஸ்டர் ஒட்டியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு மல்லேஸ்வரம் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., அஸ்வத் நாராயண், பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக, மல்லேஸ்வரத்தில் உள்ள பல பகுதிகளில் நேற்று போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அடையாளம் தெரியாத நபர்கள் அந்த போஸ்டரை ஒட்டினர். இதை அறிந்த, அஸ்வத்தின் ஆதரவாளர்கள் அனைத்து போஸ்டர்களையும் கிழித்தனர். இது குறித்து, அஸ்வத் நாராயண் கூறியதாவது: உண்மையிலேயே தைரியம் இருந்தால், உங்கள் அடையாளத்தை வெளியிட்டு போஸ்டர் ஒட்டுங்கள். இந்த வேலையை செய்தது யார் என தெரியும். ஆனால், அதை நான் சொல்ல விரும்பவில்லை. இருப்பினும், கீழ்த்தரமான அரசியல் செய்யாதீர்கள். திருட்டுத்தனமாக இரவோடு இரவாக போஸ்டர் ஒட்டுபவர்கள் கோழைகள். தைரியம் இருந்தால் என் முன் வந்து நில்லுங்கள் பார்ப்போம். எனது நற்பெயரை கெடுக்க, சிலரால் அவதுாறு பரப்பப்படுகிறது. இந்த விஷயத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !