உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தங்கவயலில் இன்று மின் தடை

 தங்கவயலில் இன்று மின் தடை

தங்கவயல்: தங்கவயலில் இன்று காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது. தங்கவயலுக்கு மின் வினியோகம் செய்யப்படும் டி.கொள்ளஹள்ளி மின் நிலையத்தில், இரண்டாம் காலாண்டு மின் பராமரிப்பு பணிகள் இன்று நடக்கிறது. இதனால், தங்கவயலின் நகரப் பகுதிகளான ராபர்ட்சன்பேட்டை, கவுதம் நகர், கீதா சாலை, பிரிசர்ட் சாலை, கணேஷ்புரம், சொர்ணாநகர், விவேக் நகர். ஆண்டர்சன்பேட்டை, துணை மின் நிலைய இணைப்பில் உள்ள பாரதபுரம், மஸ்கம், சாம்ராஜ் பேட்டை, கார்னேஷன் டவுன், சாம்பியன் ரீப், மாரிகுப்பம், பெமல் நகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது என்று மின் பராமரிப்பு துறை இணை செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை