உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கட்டணத்தை உயர்த்த மின் துறை முடிவு

கட்டணத்தை உயர்த்த மின் துறை முடிவு

பெங்களூரு: தீபாவளி பண்டிகை முடிந்த பின், கர்நாடகாவில் மின் கட்டணத்தை உயர்த்த, அரசு முடிவு செய்துள்ளது. யூனிட்டுக்கு 40 - 50 பைசா கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது குறித்து, மின்சாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கர்நாடகாவில், எதிர்பார்த்த அளவில் தென் மேற்கு பருவ மழை பெய்யவில்லை. பல இடங்களில் வெப்பத்தின் தாக்கம் நிலவுகிறது. இதன் விளைவாக மின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அணைகளில் நீர்மட்டம் குறைந்துள்ளது. நீர் மின் உற்பத்தியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. செப்டம்பரில் மாநிலத்தின் மின் தேவை, 20 ஆயிரம் மெகா வாட்டாக அதிகரித்தது. பற்றாக்குறையை சமாளிக்க, வெளிமாநிலங்களில் இருந்து, வெளி மார்க்கெட்டில் இருந்தும் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுகிறது. இதனால் மின் துறைக்கு, பொருளாதார சுமை ஏற்படுகிறது. எனவே, மின் கட்டணத்தை உயர்த்துவது கட்டாயம். கட்டண உயர்வால், கிரஹஜோதி திட்டத்தில் பதிவு செய்து கொண்டு, நிர்ணியித்த அளவில் மின்சாரம் பயன்படுத்தும் பயனாளிகளுக்கு தொந்தரவு இல்லை. திட்டத்துக்கு உட்படாத வாடிக்கையாளர்கள், இலவச மின்சார அளவை விட, அதிகமான மின்சாரம் பயன்படுத்துவோர், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். கர்நாடக மின் கட்டுப்பாட்டு ஆணையத்தின் ஒப்புதலை பெற்று, கட்டண உயர்வு அமல்படுத்தப்படும். யூனிட்டுக்கு 40 - 50 பைசா கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி