உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பிரஜ்வல் மனு தள்ளுபடி

பிரஜ்வல் மனு தள்ளுபடி

பெங்களூரு: ஹாசன் ம.ஜ.த., முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா. இவர் மீது நான்கு பலாத்கார வழக்குகள் உள்ளன. இரண்டாவது வழக்கில் பிரஜ்வலுக்கு சாகும் வரை சிறை தண்டனை கிடைத்தது. இந்நிலையில் மற்ற மூன்று வழக்குகளையும், வேறு நீதிபதி அமர்வு விசாரணைக்கு மாற்றும்படி, பிரஜ்வல் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, நீதிபதி அருண் விசாரித்தார். நேற்று, நீதிபதி அருண் கூறுகையில், ''இந்த மனுவை நாங்கள் அனுமதித்தால், இதுபோன்று நிறைய மனுக்கள் வரும்,'' என்றார். பிரஜ்வல் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை