உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ராகுல் பங்கேற்கும் போராட்டத்திற்கு ஏற்பாடுகள் பெங்களூரு சுதந்திர பூங்காவில் பணிகள் தீவிரம்

ராகுல் பங்கேற்கும் போராட்டத்திற்கு ஏற்பாடுகள் பெங்களூரு சுதந்திர பூங்காவில் பணிகள் தீவிரம்

பெங்களூரு: லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தலைமையில் போராட்டம் நடக்க உள்ள பெங்களூரு சுதந்திர பூங்காவில் ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. 'லோக்சபா தேர்தல் முறைகேட்டை கண்டித்து வரும் 5ம் தேதி, பெங்களூரு சுதந்திர பூங்காவில் ராகுல் தலைமையில் போராட்டம் நடக்கும். 'ஐந்து தலைவர்கள் மட்டும் சுதந்திர பூங்காவில் இருந்து, மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு சென்று மனு அளிப்பர்' என, துணை முதல்வர் சிவகுமார் நேற்று முன்தினம் கூறி இருந்தார். சுதந்திர பூங்காவுக்கும் சென்று அவர் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் போராட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்யும் பணிகள் நேற்று முதல் மும்முரமாக நடந்து வருகின்றன. போராட்டம் நடக்கும் சுதந்திர பூங்காவில், பொக்லைன் இயந்திரம் மூலம் மண் நேற்று சமன்படுத்தப்பட்டது. பூங்காவில் இருந்த நான்கு மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. சுதந்திர பூங்கா அமைந்துள்ள இடத்தில், ஆயிரக்கணக்கான வாகனங்களை நிறுத்தும் 'மல்டிவெலல் பார்க்கிங்' உள்ளது. இந்த பார்க்கிங்கிற்கு, பெங்களூரு போக்குவரத்து இணை கமிஷனர் கார்த்திக் ரெட்டி, போக்குவரத்து போலீசார் நேற்று சென்றனர். போராட்டத்தில் கலந்து கொள்ள வரும் காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள், தலைவர்கள், தொண்டர்களை வாகனங்கள் வருகை, புறப்பாட்டிற்கு வழி வகை ஏற்படுத்திக் கொடுப்பது பற்றி, இணை கமிஷனர் கார்த்திக் ரெட்டி ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை