உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / செப்., 1ல் மைசூருக்கு ஜனாதிபதி வருகை

செப்., 1ல் மைசூருக்கு ஜனாதிபதி வருகை

மைசூரு: அனைத்து இந்திய பேச்சு, கேட்டல் நிறுவனத்தின் வைர விழாவில் பங்கேற்க, செப்., 1ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிறார். மைசூரு மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டி கூறுகையில், ''மைசூரில் உள்ள அனைத்து இந்திய பேச்சு, கேட்டல் நிறுவனத்தின் வைர விழா, செப்., 1ம் தேதி நடக்கிறது. இவ்விழாவில் பங்கேற்க, ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தருகிறார். எனவே பாதுகாப்பில் எந்த குறைபாடும் இருக்கக் கூடாது. அவர் தங்கியிருக்கும் இடம் முதல் நிகழ்ச்சி நடக்கும் பகுதிக்கு செல்லும் சாலைகள் சுத்தமாக இருக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !